/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
' தி.மு.க.,வில் 3,000 பேர் ஐக்கியம்
/
' தி.மு.க.,வில் 3,000 பேர் ஐக்கியம்
ADDED : அக் 01, 2025 01:53 AM
அயோத்தியாப்பட்டணம், .தி.மு.க.,வின், அயோத்தியாப்பட்டணம் ஒருங்கிணைந்த ஒன்றியம் சார்பில், மாற்று கட்சியினர், 3,000 பேர், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு முன்னிலையில், தி.மு.க.,வில் இணையும் விழா, நேற்று நடந்தது. குறிப்பாக, அ.ம.மு.க., கிழக்கு மாவட்ட துணை செயலர் வசந்தி, தே.மு.தி.க., சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் நிர்மலா, அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய அம்மா பேரவை துணை செயலர் சரத்குமார், பா.ம.க., நிர்வாகி மகாலிங்கம் உள்பட, 3,000 பேர், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தனர்.
அவர்களுக்கு சால்வை அணிவித்து, அமைச்சர் வேலு வரவேற்றார். தொடர்ந்து அமைச்சர் வேலு பேசுகையில், ''கருணாநிதி ஆட்சியில் இருக்கும் போதும், தற்போது ஸ்டாலின் ஆட்சியில் இருக்கும்போதும், விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன,'' என்றார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், எம்.பி.,க்கள் சிவலிங்கம், செல்வகணபதி, மலையரசன், ஒன்றிய செயலர்கள் விஜயகுமார், ரத்தின
வேல், டவுன் பஞ்சாயத்து தலைவர் பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர், பொதுக்குழு உறுப்பினர் கோபால், டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வசூரியா, அவரது கணவர் சேதுபதி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்தி
கேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.