/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிரைவர் மயக்கம்: தாறுமாறாக ஓடிய லாரியால் கட்டட தொழிலாளி பலி
/
டிரைவர் மயக்கம்: தாறுமாறாக ஓடிய லாரியால் கட்டட தொழிலாளி பலி
டிரைவர் மயக்கம்: தாறுமாறாக ஓடிய லாரியால் கட்டட தொழிலாளி பலி
டிரைவர் மயக்கம்: தாறுமாறாக ஓடிய லாரியால் கட்டட தொழிலாளி பலி
ADDED : அக் 01, 2025 01:54 AM
சேலம், புதுச்சேரியை சேர்ந்த லாரி டிரைவர் வீரப்பன், 24. கோவையில் செருப்பு லோடு ஏற்றிக்கொண்டு, சேலம் டவுனில் உள்ள கடைக்கு கொண்டு வந்தார். அங்கு தேவையானவற்றை இறக்கிவிட்டு, மீதி செருப்புகளை, விருதாசலத்தில் இறக்க புறப்பட்டார். நேற்று மாலை, 4:00 மணிக்கு, சேலம், சீலநாயக்கன்பட்டியில் ஓட்டி
வந்தபோது, டிரைவருக்கு மயக்கம் ஏற்பட்டது.
இதில் தாறுமாறாக ஓடிய லாரி, தனியார் மருத்துவமனை அருகே உள்ள பேக்கரி முன் நின்றிருந்த வேன், புல்லட் மற்றும் நடந்து சென்ற ஒருவர் மீது மோதி நின்றது. இதில் நடந்து சென்றவர் உயிரிழந்தார்.
அன்னதானப்பட்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரித்ததில், சேலம், நாழிக்கல்பட்டியை சேர்ந்த, கட்டட தொழிலாளி சக்திமுருகன், 45, என தெரிந்தது. தவிர, வேன் டிரைவர் கவுதம், 24, புல்லட் ஓட்டி வந்த பிரசாந்த் காயம் அடைந்ததும் தெரிந்தது. அவர்களுடன், டிரைவர் வீரப்பனும், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.