/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று ஆயுத பூஜை;பொரி, கடலை, திருஷ்டி பூசணி விற்பனை அமோகம்
/
இன்று ஆயுத பூஜை;பொரி, கடலை, திருஷ்டி பூசணி விற்பனை அமோகம்
இன்று ஆயுத பூஜை;பொரி, கடலை, திருஷ்டி பூசணி விற்பனை அமோகம்
இன்று ஆயுத பூஜை;பொரி, கடலை, திருஷ்டி பூசணி விற்பனை அமோகம்
ADDED : அக் 01, 2025 02:01 AM
சேலம்:இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு, திருஷ்டி பூசணி, பொரி, கடலை, பூக்கள், பழங்கள் விற்பனை அமோகமாக நடந்தது.
சேலம், சின்னக்கடை வீதியில் உள்ள பழக்கடைகள், பொரி கடலை கடைகளில், நேற்று காலை முதலே ஏராளமான மக்கள், ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கினர். வழக்கத்தை விட பழங்கள் விலையை, கிலோவுக்கு, 10 முதல், 20 ரூபாய் வரை வியாபாரிகள் குறைத்து விற்றதால், விற்பனை களை கட்டியது. பொரி கடலை, கடலை மிட்டாய், கடலை உருண்டை, எள் உருண்டை, அவல், வெல்லம் ஆகியவற்றின் விலையில் மாற்றமின்றி விற்பனை நடந்தது. பூக்கள் விலையிலும் பெரிய ஏற்றமின்றி கிலோவுக்கு, 20 முதல், 40 ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்டிருந்தது. மாலைகள், 150 முதல், 1,000 ரூபாய் வரை அளவு, பூக்களுக்கு ஏற்றபடி விற்பனை செய்யப்பட்டது.
வாழைக்கன்று ஜோடி, 150 ரூபாய் முதல் விற்பனையானது. தென்னங்கீற்றில் கைகளால் செய்யப்பட்ட அலங்கார தோரணம், 10 ரூபாய் முதல் கிடைத்தது. வரத்து குறைந்ததால், வழக்கமாக கிலோ, 15 முதல் 20 ரூபாய்க்கு விற்கும் திருஷ்டி பூசணிக்காய், கிலோ, 30 ரூபாயாக உயர்ந்தது. சேலம் மாவட்ட உழவர் சந்தைகளிலும் காய்கறி விற்பனை அமோகமாக நடந்தது. மொத்தமுள்ள, 13 உழவர் சந்தைகளில், 311.97 டன் காய்கறி மூலம், 1.32 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. அதிகபட்சமாக தாதகாப்பட்டி உழவர் சந்தையில், 25.09 லட்சம் ரூபாய், குறைந்தபட்சமாக ஆட்டையாம்பட்டி உழவர் சந்தையில், 1.69 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.