ADDED : அக் 20, 2024 04:29 AM
சங்ககிரி: சங்ககிரி அருகே வைகுந்தம் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ரவி, 55. விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு சங்-ககிரியில் இருந்து டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில் சென்று-கொண்டிருந்தார்.
அப்போது அவரது மொபட் பின்புறம், லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரவி சம்பவ இடத்தில் பலியானார். சங்ககிரி போலீசார், தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடுகின்றனர்.அதேபோல் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுாரை சேர்ந்த லாரி டிரைவர் வடிவேல், 50. இவர் சங்ககிரியில் இருந்து பவா-னிக்கு, 'பிளாட்டினா' பைக்கில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார்.
சங்ககிரி அருகே மங்கரங்கம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இரவு, 7:20 மணிக்கு சென்றபோது, முன்புறம் குருணை அரிசி மூட்டைகளை ஏற்றி சென்றுகொண்டிருந்த டாரஸ் லாரி பின்-புறம், பைக் மோதியது.
இதில் சம்பவ இடத்தில் வடிவேல் பலியானார். சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.