/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பஞ்சராகி நின்ற அரசு டவுன் பஸ்; வெயிலில் 2 கி.மீ., நடந்த பயணியர்
/
பஞ்சராகி நின்ற அரசு டவுன் பஸ்; வெயிலில் 2 கி.மீ., நடந்த பயணியர்
பஞ்சராகி நின்ற அரசு டவுன் பஸ்; வெயிலில் 2 கி.மீ., நடந்த பயணியர்
பஞ்சராகி நின்ற அரசு டவுன் பஸ்; வெயிலில் 2 கி.மீ., நடந்த பயணியர்
ADDED : பிப் 21, 2025 07:30 AM
ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார் கிளை பணிமனையில் இருந்து கெங்கவல்லி, வலசக்கல்பட்டி, தம்மம்பட்டிக்கு, அரசு டவுன் பஸ்(தடம் எண்: 7)இயக்கப்படுகிறது. இந்த பஸ் நேற்று மதியம், 1:30 மணிக்கு, கெங்கவல்லி சுவேத நதியில் உள்ள சிவன் கோவில் அருகே வந்தபோது, டயர் பஞ்சராகி நின்றது. இந்த தடத்தில் வேறு பஸ்சும் அந்த நேரத்தில் வரவில்லை. இதனால், 30க்கும் மேற்பட்ட பயணியர் இறங்கி, கொளுத்தும் வெயிலில், 2 கி.மீ., நடந்து, கெங்கவல்லி ஸ்டாப்புக்கு சென்றனர். இந்த வீடியோ பரவி வருகிறது.
இதுகுறித்து ஆத்துார் போக்குவரத்து கிளை பணிமனை அலுவலர்கள் கூறுகையில், 'டவுன் பஸ் பஞ்சரானதால் வேறு டயர் மாற்றப்பட்டு, மீண்டும் அதே தடத்தில் பஸ் இயக்கப்பட்டது. அனைத்து டவுன், மப்சல் பஸ்களிலும் மாற்று டயர் வைக்கப்பட்டுள்ளது. பஞ்சரான பஸ்சின் டயரை கழற்றி, அருகே உள்ள கடையில் சரிசெய்து பஸ் மீண்டும் இயக்கப்பட்டது. டயர் மாற்றிய பின் பஸ் செல்லும் என கூறியபோதும், பயணியர் இறங்கி நடந்து சென்றனர்' என்றனர்.