/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாழிக்கல்பட்டியில் 2 ஏரிகள் நிரம்பின
/
நாழிக்கல்பட்டியில் 2 ஏரிகள் நிரம்பின
ADDED : டிச 04, 2024 07:00 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டி ஊராட்சியில், 25 ஏக்கரில் துர்க்கை அம்மன் கோவில் ஏரி உள்ளது. ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, சில நாட்களாக பெய்த மழையால் நிரம்பியது. அதன் உபரி நீர், கால்வாய் வழியே பாப்பான் குட்டை ஏரிக்கு செல்கிறது. தற்போது அந்த ஏரியும் நிரம்பியது. அதன் உபரி நீர் ஓடை வழியே பூலாவரி ஏரிக்கு செல்கிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'நாழிக்கல்பட்டியில் இரு ஏரிகளையும் அளவீடு செய்து துார்வாரி சீரமைக்க, பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆக்கிரமிப்பை அகற்றி, துார்வாராமல் உள்ளதால்தான் மழைநீரை தேக்கி வைக்க முடியவில்லை. ஏரிக்கு வரும் நீர், வெளியே செல்கிறது. ஏரி நீர் வழித்தடங்களும் சீரமைக்கப்படாமல் உள்ளன' என்றனர்.