/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தில் சிக்கிய பைக்கில் 2 மூட்டை புகையிலை
/
விபத்தில் சிக்கிய பைக்கில் 2 மூட்டை புகையிலை
ADDED : ஜன 02, 2025 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: இடைப்பாடி, அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். ஜவுளி கடையில் பணிபுரியும் இவர், ஆவணியூர் புறவ-ழிச்சாலையில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தவறி விழுந்த  அவருக்கு, காலில் படுகாயம் ஏற்பட்-டது. மக்கள், அவரை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அனுப்-பினர். தகவல் அறிந்து அங்கு வந்த இடைப்பாடி போலீசார், பைக்குடன், 2 மூட்டைகளில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. இதனால், பைக்குடன் ஸ்டேஷனுக்கு எடுத்துச்சென்றனர். மேலும் பிரகாஷிடம் விசாரிக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.

