/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவருக்கு புகையிலை விற்ற 2 பேர் கைது
/
மாணவருக்கு புகையிலை விற்ற 2 பேர் கைது
ADDED : செப் 21, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் டவுன் போலீசார், முத்தவல்லி, யாகூப் தெருவில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வ.உ.சி., மார்க்கெட், லட்சுமி நகரை சேர்ந்த சாதிக் பாஷா, 50, புகையிலை பொருட்களை பள்ளி மாணவர்களுக்கு விற்றுக்கொண்டிருந்தார்.
உடனே அவரை கைது செய்த போலீசார், 1,700 ரூபாய் மதிப்பில் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் சின்னக்-கடை வீதியில் பள்ளி அருகே மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்றதாக, சேலம், குறும்பர் தெருவை சேர்ந்த வெங்-கடேசன், 49, என்பவரையும், போலீசார்
கைது செய்தனர். அவ-ரிடம், 4,900 ரூபாய் மதிப்பில் புகையிலை பொருட்களை பறி-முதல் செய்தனர்.