/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுமி உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து; கூலித்தொழிலாளிக்கு 'காப்பு'
/
சிறுமி உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து; கூலித்தொழிலாளிக்கு 'காப்பு'
சிறுமி உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து; கூலித்தொழிலாளிக்கு 'காப்பு'
சிறுமி உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து; கூலித்தொழிலாளிக்கு 'காப்பு'
ADDED : நவ 20, 2024 07:36 AM
ஓமலுார்: காடையாம்பட்டி அடுத்த நடுப்பட்டியை சேர்ந்தவர், 18 வயது சிறுமி. இவர், 15 வயதில் இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த, கூலித்தொழிலாளி அறிவழகன், 27, என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். 2021ல், சிறுமி பிரசவத்துக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி அறிவழகனை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பின் வெளியே வந்தார்.இந்நிலையில் அவருக்கும், சிறுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு சிறுமி, அத்தை கஸ்துாரி, 35, ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு சென்ற அறிவழகன், சிறுமியிடம் தகராறில் ஈடுபட்டார்.
தொடர்ந்து அவர், கத்தியால் சிறுமியையும், கஸ்துாரியையும் குத்திவிட்டு தப்பினார். படுகாயம் அடைந்த இருவரையும், மக்கள் மீட்டு ஓமலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமி புகார்படி நேற்று அறிவழகனை, தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.