/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபைல் தருவதாக பண மோசடிபெண் உள்பட 2 பேர் கைது
/
மொபைல் தருவதாக பண மோசடிபெண் உள்பட 2 பேர் கைது
ADDED : மே 02, 2025 01:09 AM
சேலம்தாரமங்கலத்தை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன், 23. இவர் குறைந்த விலையில் மொபைல் போன் விற்பதாக, ஆன்லைனில் வந்த விளம்பரத்தை பார்த்தார். தொடர்ந்து அதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, 'கியூ.ஆர்.கோடு' மூலம் பணம் செலுத்தினால், மொபைல் அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் கோகுலகிருஷ்ணன், 11,000 ரூபாயை அனுப்பினார். மொபைல் வரவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டு பேசியபோது சரிவர பதில் இல்லை. இதனால் கோகுல கிருஷ்ணன் புகார்படி, சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணையில், ஆன்லைன் மூலம் பணமோசடி செய்தது, நெல்லை மாவட்டம் ராஜகிருஷ்ணபுரத்தை சேர்ந்த ராஜாசன், 25, ஈரோடு மாவட்டம் பெருந்துறை நித்யஸ்ரீ, 21, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 9 மொபைல் போன்கள், 2 லேப்டாப், 25 கிராம் தங்க நாணயம், 10 ஏ.டி.எம்., கார்டுகள், 8 வங்கி கணக்கு புத்தகம், 3 செக் புக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.