/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
43 பவுன் திருடிய 2 பேருக்கு 'காப்பு'
/
43 பவுன் திருடிய 2 பேருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 11, 2024 12:56 AM
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே வையப்பமலை, அன்னை நகரை சேர்ந்த தம்பதியர் கோபால், 58, மாது, 50; கூலித்தொழிலாளிகள்.
இவர்கள் வீட்டில், கடந்த, 6 இரவு, முகமூடி அணிந்து புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த, 43 பவுன் நகைகள், 50,000 ரூபாய், இரு மொபைல் போன்களை, திருடிச்சென்றனர்.இதுகு-றித்த புகார்படி, எலச்சிபாளையம் போலீசார் விசாரித்தனர். நேற்று மல்லசமுத்திரம் அருகே ஆத்துமேடு டாஸ்மாக்கில் இருந்த இரு-வரை பிடித்து விசாரித்ததில், சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ், 19, ஆட்டையாம்பட்டி முருகேசன், 21, என்பதும், கோபால் வீட்டில் திருடியதும் தெரிந்தது. அவர்களிடம், 21 பவுன் நகைகள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.