/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எறும்பு தின்னி வேட்டை 2 பேருக்கு 3 ஆண்டு சிறை
/
எறும்பு தின்னி வேட்டை 2 பேருக்கு 3 ஆண்டு சிறை
ADDED : ஏப் 30, 2025 01:17 AM
மேட்டூர்:சேலம் மாவட்டம் கொளத்துார், பாலமலை ஊராட்சி, இடைமலைகாட்டை சேர்ந்தவர் மாதப்பன், 38. கண்ணாமூச்சி ஊராட்சி மூலப்பனங்காட்டை சேர்ந்தவர் சவுந்தரராஜன், 27. இருவரும், 2018 செப்., 18ல் பாலமலையில் உள்ள அரியவகை உயிரினமான எறும்பு தின்னியை வேட்டையாடி கடத்த முயன்றனர். இதனால் மேட்டூர் வனத்துறையினர், இருவரையும் கைது செய்து, எறும்பு தின்னியை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்: 1ல் நடந்தது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அதன் முடிவில் மாதப்பன், சவுந்தரராஜன் ஆகியோருக்கு தலா, 3 ஆண்டுகள் சிறை தண்டனை, 25,000 ரூபாய் அபராதம் விதித்து, மாஜிஸ்திரேட் பத்மப்ரியா உத்தரவிட்டார்.

