/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'ப்ரிட்ஜ்' வெடித்து தீ 2 பேர் உயிர் தப்பினர்
/
'ப்ரிட்ஜ்' வெடித்து தீ 2 பேர் உயிர் தப்பினர்
ADDED : நவ 26, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், காமராஜர் சாலை, காளமேகம் தெருவை சேர்ந்த, பொன்னுசாமி மனைவி பச்சையம்மாள், 70. ஓய்வு பெற்ற தாலுகா அலுவலக உதவியாளரான இவர், நேற்று, 14 வயது பேரன் பாலாவுடன் வீட்டில் இருந்தார்.
மாலை, 6:50 மணிக்கு, 'ப்ரிட்ஜ்' வெடித்து தீப்பற்றி எரிந்தது. இருவரும் உடனே வெளியேறியதால் உயிர் தப்பினர். உடனே ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இரவு, 7:00 மணிக்கு அங்கு சென்ற வீரர்கள், மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இதில் ப்ரிட்ஜ் அருகே இருந்த பாத்திரங்கள், மளிகை பொருட்கள் உள்பட, 2 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் எரிந்து நாசமாகின. ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

