ADDED : மே 14, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல் :தலைவாசல், மணிவிழுந்தான் காலனியை சேர்ந்த, கூலித்தொழிலாளி சுப்ரமணி, 60. நேற்று முன்தினம் இரவு, வீடு அருகே, 5 ஆடுகளை கட்டி வைத்திருந்தார். நேற்று காலை, 6:00 மணிக்கு, 5 ஆடுகளும் கடித்து குதறிய நிலையில் கிடந்தன.
இதில் இரு ஆடுகள் இறந்துவிட்டன. தகவல்படி, கால்நடை மருத்துவ குழுவினர், காயம் அடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். விவசாயிகள் கூறுகையில், 'வெறி நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இரவில் ஆடு, கோழிகளை வேட்டையாடி வருகின்றன. இரு மாதங்களில், 50க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் இறந்துள்ளன. தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்' என்றனர்.