தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 2 மாணவர் மாயம்

2 மாணவர் மாயம்

2 மாணவர் மாயம்


ADDED : ஆக 19, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்:ஈரோடு மாவட்டம் அந்தியூர், கொமராயனுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி மதன். இவரது மகன் கவின், 15. அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் மகன் டேனியல், 15. நண்பர்களான இருவரும் சேலம் மாவட்டம் கொளத்துார் அரசு நிதி உதவி பெறும் நிர்மலா பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கின்றனர்.

இருவரும் நேற்று முன்தினம் காலை, டவுன் பஸ்சில் பள்ளிக்கு புறப்பட்டு, கொளத்துார் பஸ் ஸ்டாண்ட் வந்தனர். அங்கிருந்து பள்ளிக்கு செல்வில்லை. காலை, 10:00 மணிக்கு, மாணவர்கள் வரவில்லை என, பள்ளியில் இருந்து தகவல் கிடைத்தது. இரு மாணவர்களின் பெற்றோரும் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து நேற்று காலை, கவினின் தாய் கலா அளித்த புகார்படி, கொளத்துார் போலீசார், 2 பேரையும் தேடுகின்றனர்.

குழந்தையுடன் தாய்

ஜலகண்டாபுரத்தை சேர்ந்த, அய்யப்பன் மனைவி பூர்ணிமாதேவி, 25. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி தகராறால், 8 மாதங்களுக்கு முன், பூர்ணிமாதேவி, சேலம், பள்ளப்பட்டி அருகே சாமிநாதபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு, 3 வயது பெண் குழந்தையுடன் வந்தார். கடந்த, 14ல் பூர்ணிமாதேவி, அந்த குழந்தையுடன் வெளியே சென்ற நிலையில், திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரது தாய் சரஸ்வதி நேற்று முன்தினம் அளித்த புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us