தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி


ADDED : ஆக 19, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:சேலம் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில், கடந்த, 12 முதல், அக்., 12 வரை, எய்ட்ஸ் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி சேலம் கலெக்டர் இளம் பகவத் தலைமையில் நேற்று, கலெக்டர் அலுவலக ஊழியர்கள், கல்லுாரி மாணவர்கள், ஆட்டோ டிரைவர்கள், எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க ஊழியர்கள், உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, 'விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்' என, கையெழுத்திட்டனர்.

பின், ஆட்டோக்கள் மற்றும் கல்லுாரி மாணவியர் விழிப்புணர்வு

பேரணியை, கலெக்டர் தொடங்கிவைத்தார். மாணவியர் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட தட்டிகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். பின் கலைக்குழுவினர், கார்ட்டூன் பொம்மை போன்று வேடம் அணிந்தும், கரகாட்டம் ஆடியும், மக்களிடம் விழிப்புணர்வு செய்யும் நிகழ்ச்சிகளையும் தொடங்கி வைத்தார்.

முன்னதாக விழாவில் சேலம் போலீஸ் கமிஷனர் ஜோஷி நிர்மல்குமார், எஸ்.பி., குத்தாலிங்கம், மருத்துவ பணி இணை இயக்குனர் நந்தினி, துணை இயக்குனர் சவுண்டம்மாள், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட மாவட்ட அலுவலர் தாமோதரன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us