ADDED : அக் 14, 2026 05:24 AM
அ நிறம் | அளவு
இடைப்பாடி:தமிழக
மாசு கட்டுபாடு வாரிய அதிகாரிகள், கடந்த மாதம் இடைப்பாடியில் ஆய்வு
செய்தபோது, அரசு அனுமதியின்றி சாயப்பட்டறைகள் செயல்படுவது
தெரிந்தது. 15 நாட்களுக்குள் அகற்றிக்கொள்ள அறிவுறுத்தினர். ஆனால்
அகற்றிக்கொள்ளவில்லை.
இதனால் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு
உத்தரவுப்படி நேற்று, இடைப்பாடியில் ஆறுமுகம் என்பவருக்கு
சொந்தமான டையிங் பட்டறையில் இருந்த சாயம் கலந்த தொட்டி; காமராஜ்
நகரில் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான சாயப்பட்டறை தொட்டியை,
மேட்டூர் மாசு கட்டுப்பாடு வாரியத்தினர், வருவாய்த்துறையினர்,
இடைப்பாடி போலீசார் அடங்கிய குழுவினர் இடித்து அகற்றினர்.
