ADDED : அக் 14, 2026 05:25 AM

அ நிறம் | அளவு
ஏற்காடு:ஏற்காடில்
கடந்த வாரம் முழுதும் இரவில் மழை பெய்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை,
3:00 மணிக்கு, ஏற்காடு மலைப்பாதை, 40 அடி பாலம் அருகே சாலையோரம் இருந்த
ராட்சத காட்டு மரம் ஒன்று முறிந்து, சாலை குறுக்கே விழுந்தது.
அப்போது
போக்குவரத்து இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. தொடர்ந்து
ஏற்காடு தீயணைப்பு துறையினர், மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
