/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணைக்கு வரத்தை விட 2 மடங்கு தண்ணீர் திறப்பு
/
மேட்டூர் அணைக்கு வரத்தை விட 2 மடங்கு தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணைக்கு வரத்தை விட 2 மடங்கு தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணைக்கு வரத்தை விட 2 மடங்கு தண்ணீர் திறப்பு
ADDED : ஆக 26, 2024 08:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் அணை கடந்த ஜூலை, 30ம் தேதி, முழு கொள்ளவான, 120 அடியை எட்டியது. இந்நிலையில் கடந்த, 11ல் நீர்மட்டம், 119 அடியானது. மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க, 12ல், 120 அடியை எட்டியது.
பின் திறப்பை விட வரத்து சரிந்ததால், 21ல், 119 அடியாக சரிந்தது. நேற்று முன்தினம், 6,467 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, 6,598 கன அடியாக சற்று அதிகரித்தது. அதேசமயம் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு, 12,000 கன அடி நீர், கால்வாயில், 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
வரத்தை விட இரு மடங்கு தண்ணீர் திறப்பால், 118.39 அடியாக நேற்று நீர்மட்டம் சரிந்தது. நீர் இருப்பு, 90.92 டி.எம்.சி.,யாக இருந்தது.