/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
20 பவுன் நகை கொள்ளைமேலும் 3 பேருக்கு 'காப்பு'
/
20 பவுன் நகை கொள்ளைமேலும் 3 பேருக்கு 'காப்பு'
ADDED : ஏப் 16, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
20 பவுன் நகை கொள்ளைமேலும் 3 பேருக்கு 'காப்பு'
ஆத்துார்:தம்மம்பட்டி, மண்மலை ஊராட்சி பாலக்காட்டை சேர்ந்த, ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., வேணுகோபால், 75. இவரது வீட்டில், 20 பவுன் நகைகள், 10,000 ரூபாய், கடந்த மார்ச், 29ல் கொள்ளைபோனது. தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசார், தனியார் 'டிடெக்டிவ்' ஏஜன்சி நடத்திய பெண் உள்பட, திருப்பூர், கோவையை சேர்ந்த, 7 பேரை கைது செய்தனர். இந்நிலையில் திருப்பூர், பல்லடத்தை சேர்ந்த சதீஷ்குமார், 24, ஷாரூக்கான், 28, கனகராஜ், 23, ஆகியோரை நேற்று கைது செய்தனர். இதன்மூலம் கைது எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.