ADDED : அக் 17, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் வளாகம், அண்ணா சிலை அருகே, மேச்சேரி பிரிவு சாலை, தர்மபுரி பிரதான சாலை, கடைவீதி உள்ளிட்ட பொது இடங்களில் ஆங்காங்கே விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
முக்கியமாக, கடைகளை மறைத்து வைக்கப்பட்டிருந்த பேனர்களால், தீபாவளி வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும், ஓமலுார் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு புகார் சென்றது. இதனால் நேற்று, செயல் அலுவலர் சந்திரகுமார் தலைமையில் பணியாளர்கள், ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த, 20 பேனர்களை அகற்றினர்.