/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் பா.ஜ.,வினர் 20 பேர் சிறைபிடிப்பு
/
சேலத்தில் பா.ஜ.,வினர் 20 பேர் சிறைபிடிப்பு
ADDED : பிப் 04, 2025 06:37 AM
சேலம்: திருப்பரங்குன்றம், மலை விவகாரம் தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்னை நிலவி வருகிறது. இந்நிலையில், ஹிந்து முன்னணி சார்பில் திருப்பரங்குன்றம் கோவில் முன், இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக சேலம் மாவட்ட, பா.ஜ., சார்பில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், நேற்று பா.ஜ., மாவட்ட தலைவர் சசிகுமார் மற்றும் சில நிர்வாகிகள் திருமண நிகழ்ச்சி
ஒன்றில் கலந்து கொள்வதற்காக, ஓமலுார் பிரதான சாலையில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்றனர்.தகவல் அறிந்த மாநகர போலீசார், மண்டபம் சென்று சேலம் மாவட்ட தலைவர் சசிகுமார், முன்னாள் தலைவர்
சுரேஷ்பாபு, அண்ணாதுரை உள்ளிட்ட நிர்வாகிகளை மண்டபத்திலேயே சிறை பிடித்தனர். இதே போல மாவட்ட
துணைத் தலைவர் சரவணன் அவரது வீட்டில் இருக்கும்போதே போலீசார் சிறை பிடித்தனர். இதே போல
மாநகரில், 20 நிர்வாகிகளை மாநகர போலீசார் அவரவர் இல்லத்தில் சிறை பிடித்தனர்.

