/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழிலாளி வீட்டில் 20 பவுன் திருட்டு; சாவியை வைத்துச்சென்றதால் 'சம்பவம்'

ADDED : டிச 06, 2024 07:19 AM
ஓமலுார்: தொழிலாளி வீட்டில், 20 பவுன் நகைகள் திருடுபோனது. இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது, சாவியை அங்கேயே வைத்துச்சென்றதால், இச்சம்பவம் நடந்தது தெரியவந்தது.
சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே கருத்தானுாரை சேர்ந்தவர் அன்பழகன், 46. மினி வேனில் வெல்லம் ஏற்றிச்செல்லும் தொழில் செய்கிறார். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு, 3 மகள்கள். நேற்று காலை, அன்பழகன் பணிக்கு சென்றார். அமுதா ஏரி வேலைக்கு சென்றார். மகள்கள் கல்லுாரி சென்றனர். இந்நிலையில் வேலை முடிந்து அமுதா வீட்டுக்கு வந்தபோது, 'டிவி' மீது அவர் வைத்திருந்த, 1,000 ரூபாயை காணவில்லை. சந்தேகப்பட்ட அமுதா, பீரோவை திறந்து பார்த்தபோது அதிலிருந்த, 20 பவுன் நகைகள், 1 லட்சம் ரூபாய் திருடுபோனது தெரிந்தது. பின் அன்பழகன் புகார்படி, ஓமலுார் போலீசார் ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் ஆய்வு செய்தார். போலீசார் கூறுகையில், ''வீட்டை பூட்டிவிட்டு அருகில் சாவியை வைத்து அனைவரும் சென்றுவிட்டனர். மர்ம நபர், சாவியை எடுத்து திறந்து பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடிச்சென்றுள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.