ADDED : நவ 14, 2024 07:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துாரில் உள்ள தனியார் பள்ளி வேன், நேற்று அப்பமசமுத்திரம், ராமநாயக்கன்பாளையம், புதுார், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட இடங்களில் மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டது. தொடர்ந்து காலை, 8:30 மணிக்கு, பனமரத்துப்பட்டி வழியே வேன் சென்றபோது எதிரே வந்த பைக் மீது மோதாமல் இருக்க, டிரைவர் மணி, 35, சாலையோரம் வேனை திருப்பினார்.
அப்போது அங்கிருந்த பனை மரம் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வேனின் முன்புற கண்ணாடி நொறுங்கியது. மாணவ, மாணவியர் கூச்சலிட்டதால், அப்பகுதியினர் உடனடியாக வந்து, 20 பேரையும்
மீட்டனர். பின் அந்த வழியே வந்த, அதே பள்ளியின் மற்றொரு வாகனத்தில் மாணவர்களை அனுப்பினர். மரத்தில் மோதிய வேனை, 'பொக்லைன்' மூலம் மீட்டனர்.

