ADDED : டிச 03, 2025 07:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், பா.ஜ., சார்பில், மேச்சேரி டவுன் பஞ்சாயத்து கூட்டம், அங்குள்ள வீரபத்ரன் கோவில் திடலில் நேற்று நடந்தது. சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் தலைமை வகித்தார். அதில், மேலாண்டியூரில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய, 200 பேர் பா.ஜ.,வில் இணைந்தனர்.
தொடர்ந்து ஹரிராமன் கூறுகையில், ''டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர், மேலாண்டியூரில், மயான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அந்த நிலத்தை மீட்டு தரும் வரை பா.ஜ., சார்பில் மேலாண்டியூர் மக்களுக்கு குரல் கொடுப்போம்,'' என்றார்.
கலை, கலாசார பிரிவு மாநில செயலர் பிரபாகரன், மாவட்ட பொதுச்செயலர் ராஜசேகர், மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன், ஒன்றிய தலைவர் முருகன், பேரூர் அமைப்பாளர் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

