ADDED : டிச 03, 2025 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி, இடைப்பாடி, பக்கநாட்டில் கனிம வளத்துறை தாசில்தார் ராஜ்குமார், நேற்று முன்தினம் நள்ளிரவு ஆய்வு செய்தார். அப்போது, 3 யுனிட் செம்மண் அள்ளிய டிப்பர் லாரியை பறிமுதல் செய்தார். தொடர்ந்து அவர் புகார்படி, பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, லாரியை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய டிரைவர் குறித்து விசாரிக்கின்றனர்.
டிரைவர் கைது
அதேபோல் ஓமலுார், கோட்டை மாரியம்மன் கோவில் அருகே வாகன தனிக்கையில் ஈடுபட்டார். அப்போது டிப்பர் லாரியில், 3 யுனிட் நுரம்பு மண் கடத்தி வந்தது தெரிந்தது. மண்ணுடன் டிப்பர் லாரியை கைப்பற்றி, ஓமலுார் போலீசாரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து போலீசார் விசாரித்து, பனமரத்துப்பட்டியை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார், 45, என்பவரை கைது செய்தனர்.

