ADDED : ஆக 22, 2025 01:20 AM
சேலம், அமாவாசை, வார இறுதி நாட்களை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சார்பில் இன்று முதல், வரும், 25 வரை, 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பென்னாகரம், ஊத்தங்கரை, அருர், மேட்டூருக்கு இயக்கப்படுகின்றன.
அதேபோல் சேலத் தில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஓசூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பதி; பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோடு, காஞ்சிபுரம்; ஓசூரில் இருந்து சேலம், சென்னை, புதுச்சேரி, கடலுார், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூருக்கு இயக்கப்படுகின்றன.
மேலும் நாமக்கல்லில் இருந்து ஆத்துார், செந்தாரப்பட்டிக்கும், ராசிபுரத்தில் இருந்து சென்னைக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக் கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் அமாவாசையை முன்னிட்டு சேலம் மற்றும் தர்மபுரியில் இருந்து மேச்சேரி, மேட்டூர், மாததேஸ்வரன் மலை ஆகிய ஊர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பவானி கூடுதுறை, சித்தர்கோவிலுக்கம், தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவதாக, கோட்ட நிர்வாக இயக்குனர் குணசேகரன் தெரிவித்தார்.

