/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பவுர்ணமி, வார இறுதி நாள் 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
பவுர்ணமி, வார இறுதி நாள் 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்
பவுர்ணமி, வார இறுதி நாள் 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்
பவுர்ணமி, வார இறுதி நாள் 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : பிப் 23, 2024 01:58 AM
சேலம்;பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்கு இன்று மதியம், 1:00 மணி முதல், நாளை மதியம், 1:00 மணி வரை, ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் வீதம், சேலம், தர்மபுரி, ஓசூர் பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து முன்பதிவு செய்யும் பயணியருக்கு பஸ்கள் இயக்கப்படும்.
அதுமட்டுமின்றி பயணியர் வருகைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். மேலும் வார இறுதி நாட்களில் சொந்த ஊர் செல்லும் பயணியர் வசதிக்கு, இன்று முதல், வரும், 26 வரை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து, 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
முக்கிய நகரங்களில் இருந்து தொழில் நகரங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் இந்த பஸ்கள் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் சென்னை, மதுரை, பெங்களூரு, திருவண்ணாமலை, சிதம்பரம், திருச்சியில் இருந்து பஸ்கள் இயக்கப்படும். இதற்கு அரசு விரைவு போக்குவரத்துக்கழக முன்பதிவு மையங்கள், www.tnstc.in இணையதளம் வழியே முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோட்ட மேலாண் இயக்குனர் பொன்முடி தெரிவித்தார்.