/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளிகள் திறப்பை முன்னிட்டு 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
பள்ளிகள் திறப்பை முன்னிட்டு 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்
பள்ளிகள் திறப்பை முன்னிட்டு 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்
பள்ளிகள் திறப்பை முன்னிட்டு 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : மே 30, 2025 02:30 AM
சேலம் :சேலம் அரசு போக்குவரத்து நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் அறிக்கை: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், மே, 30(இன்று) முதல் ஜூன், 2 வரை, 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், மேட்டூருக்கு இயக்கப்படுகிறது.
சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஓசூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பதிக்கு, பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோடு, காஞ்சிபுரம்; ஓசூரில் இருந்து சேலம், சென்னை, புதுச்சேரி, கடலுார், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர்; நாமக்கல்லில் இருந்து ஆத்துார், செந்தாரப்பட்டி; ராசிபுரத்தில் இருந்து சென்னை, திருவண்ணாமலை; ஈரோட்டில் இருந்து பெங்களூரு; திருச்சியில் இருந்து ஓசூருக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பயணியர் அரசு விரைவு போக்குவரத்து முன்பதிவு மையங்கள், www.tnstc.in என்ற இணையதளம் மூலம், முன்பதிவு செய்து கொள்ளலாம்.