/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொப்பரை வரத்து 2,000 கிலோ அதிகரிப்பு
/
கொப்பரை வரத்து 2,000 கிலோ அதிகரிப்பு
ADDED : ஜூலை 10, 2024 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி: சேலம், உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது.
இதில், 7,651 கிலோ கொப்பரை கொண்டுவரப்பட்டது. கடந்த வாரம், 5,403 கிலோ இருந்த கொப்பரை வரத்து, நேற்று, 2,000 கிலோ அதிகரித்தது. ஒரு கிலோ, 66 முதல், 94.50 காசு வரை, வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். கடந்த வாரம் கிலோ கொப்பரை, 68 முதல், 95 ரூபாய் வரை விற்றது. 7,651 கிலோ கொப்பரை மூலம், 6.85 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்ரமணியன் தெரிவித்தார்.