ADDED : மார் 27, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.20,000 பறித்த 6 பேர் கைது
சேலம்:சென்னை, சேப்பாக்கத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 72. வேலை விஷயமாக, கடந்த, 22ல் சேலம் வந்தார். 24ல், டவுன் அலங்கார் தியேட்டர் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, 20,000 ரூபாயை பறித்துக்கொண்டது. இதுகுறித்து அவர் புகார்படி, டவுன் போலீசார் விசாரித்து, செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த சண்முகம், 33, கிச்சிப்பாளையம் முத்து, 29, முருகன், 32, ஆனந்த், 34, மணி, 35, பிரகாஷ், 32 ஆகியோரை கைது செய்தனர்.