ADDED : டிச 19, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவன, சேலம் மாவட்ட துணை மேலாளர் பிரகாஷ் அறிக்கை: தமிழக அரசு கேபிள், 'டிவி'யில், சேலம் மாவட்டம் முழுதும், 1.91 லட்சம் சந்தாதாரர்கள், 1,193 கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்கள் உள்ளனர். ஆப்ப-ரேட்டர்களின் கோரிக்கையை அரசு ஏற்று, முதல்கட்டமாக, 20,000 எச்.டி., பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், எச்.டி., தரத்தில், 'டிவி'யில் காட்சிகளை பார்க்கலாம்.
மேலும் உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்கள், பாக்ஸ்களுக்கு முன்பணம், 500 வீதம் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரும்பும் சந்தாதாரர்கள், ஆப்ப-ரேட்டர்கள் மூலம் முன்பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.