/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லாரியில் 20,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
/
லாரியில் 20,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
ADDED : ஆக 08, 2025 11:24 PM
ஓமலுார்:லாரியுடன், 20,000 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், கடத்திய இருவரை கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலுார், காமலாபுரம் அருகே, தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் இரவு, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு லாரியில், 550 வெள்ளை நிற கேன்களில் எரிசாராயம் இருந்தது. லாரியில் இருந்தவர்களிடம் விசாரித்ததில், கோவை, பொள்ளாச்சியை சேர்ந்த அன்பழகன், 47, கேரள மாநிலம், பாலக்காடை சேர்ந்த பகீர்மொய்தீன், 54, என தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், லாரியில் இருந்த 20,000 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்து, ஓமலுார் இரும்பாலை மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.