/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோட்டை மாரியம்மன் ஆடித்திருவிழா முதல்முறையாக நடந்த தேரோட்டம்
/
கோட்டை மாரியம்மன் ஆடித்திருவிழா முதல்முறையாக நடந்த தேரோட்டம்
கோட்டை மாரியம்மன் ஆடித்திருவிழா முதல்முறையாக நடந்த தேரோட்டம்
கோட்டை மாரியம்மன் ஆடித்திருவிழா முதல்முறையாக நடந்த தேரோட்டம்
ADDED : ஆக 08, 2025 11:23 PM

சேலம்,:கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவில், முதல்முறையாக நடந்த தேரோட்ட விழாவில், ஏராளமான பக்தர்கள் வெள்ளத்தில், ஆடி அசைந்து வந்த தேரை, திரளானோர் வழிபட்டனர்.
சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவில், தேரோட்ட விழா நேற்று நடந்தது. முன்னதாக மூலவர், உற்சவர் மாரியம்மனுக்கு, பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால், அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவ மாரியம்மனை, தேரில் எழுந்தருள செய்து, வேதங்கள் முழங்க, மந்திர அர்ச்சனை நடத்தப்பட்டது.
மகா தீபாராதனைக்கு பின், ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுக்க, ரத வீதிகளில் தேர், 'ஆடி' ஆசைந்து வலம் வந்தது. வீதிகளின் இருபுறமும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று, அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் ராஜகோபுரம் முன் துவங்கிய தேரோட்டம், முதல், இரண்டாம் அக்ரஹாரம், சின்னக்கடைவீதி, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் வழியே, மீண்டும் கோவில் வளாகத்துக்கு வந்து சேர்ந்தது.