/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காங்கேயத்தில் மாநில கலை திருவிழாஅரசுப்பள்ளி மாணவர் 2,080 பேர் பங்கேற்பு
/
காங்கேயத்தில் மாநில கலை திருவிழாஅரசுப்பள்ளி மாணவர் 2,080 பேர் பங்கேற்பு
காங்கேயத்தில் மாநில கலை திருவிழாஅரசுப்பள்ளி மாணவர் 2,080 பேர் பங்கேற்பு
காங்கேயத்தில் மாநில கலை திருவிழாஅரசுப்பள்ளி மாணவர் 2,080 பேர் பங்கேற்பு
ADDED : ஜன 05, 2025 02:01 AM
காங்கேயம்: பள்ளிக் கல்வித்துறை சார்பில் தற்போது, அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் மட்டும் பங்கேற்கும் கலைத்திருவிழா போட்டி, மூன்று பிரிவுகளில், 196 இனங்களில் நடந்து வருகிறது.
இதன்படி ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கலை வாய்ப்பாட்டு, கருவி இசை, நடனம், நாடகம் மொழித்திறன் என ஆறு வகை போட்டி, 36 இனங்களில் நடைபெறுகிறது. ஒன்பது முதல் பிளஸ் ௨ வரை நுண் கலை, வாய்ப்பாட்டு, கருவி இசை தோல் கருவிகள், துளை கருவிகள், நந்தி கருவிகள், இசை சங்கமம், நடனம், நாடகம், மொழித்திறன் என ஒன்பது பிரிவுகளில் போட்டி நடக்கிறது. 11, 12ம் வகுப்புக்கு கட்டுரை எழுதுதல், பேச்சுபோட்டி, கவிதை உள்ளிட்ட, 12 பிரிவுகளில் போட்டி நடக்கிறது. தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் கலைத்திருவிழா நடந்தது. இதில்  வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தற்போது மாநில அளவில் போட்டி நடக்கிறது.
இதில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோவை மாவட்டத்திலும், 9, 10 வகுப்புகளுக்கு ஈரோடு மாவட்டத்திலும், பிளஸ் ௧ மற்றும் பிளஸ் ௨வுக்கு நாமக்கல் மாவட்டத்திலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திலும் இறுதிப்போட்டி நடக்கிறது. காங்கேயத்தில் நேற்று நடந்த இறுதிப்போட்டியை, அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி துவக்கி வைத்தனர். இதில் தமிழகம் முழுவதும் இருந்து, 38 மாவட்டங்களை சேர்ந்த, 2,080  அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ, மாணவியர் பல்வேறு பிரிவுகளில் திறமைகளை வெளிப்படுத்தினர்.

