/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
21 நுாலகம், பள்ளி வகுப்பறைகட்டடங்கள் முதல்வர் திறப்பு
/
21 நுாலகம், பள்ளி வகுப்பறைகட்டடங்கள் முதல்வர் திறப்பு
21 நுாலகம், பள்ளி வகுப்பறைகட்டடங்கள் முதல்வர் திறப்பு
21 நுாலகம், பள்ளி வகுப்பறைகட்டடங்கள் முதல்வர் திறப்பு
ADDED : ஏப் 12, 2025 01:47 AM
21 நுாலகம், பள்ளி வகுப்பறைகட்டடங்கள் முதல்வர் திறப்பு
சேலம்:முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம், சேலம் மாவட்டத்தில் நேற்று, 5.46 கோடி ரூபாய் மதிப்பில், 21 நுாலக கட்டடங்கள், 1.97 கோடி ரூபாய் மதிப்பில், பள்ளி வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார். தொடர்ந்து, கலெக்டர் பிருந்தாதேவி, பனைமரத்துப்பட்டி, பள்ளிதெருப்பட்டி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சூரமங்லகம் முழு நேர நுாலகத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் குத்துவிளக்கு ஏற்றினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையில் செயல்படும் பொது நுாலக இயக்கம் சார்பில், 5.46 கோடி ரூபாய் மதிப்பில் சூரமங்கலம், இளம்பிள்ளை, ஏத்தாப்பூர், தேவூர், வாழப்பாடி, முத்துநாயக்கன்பட்டி உள்பட 21 நுாலக கட்டடங்களை, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். அதேபோல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், 1.97 கோடி ரூபாய் மதிப்பில் கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, வாழப்பாடி ஒன்றியங்களில் கட்டப்பட்ட தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் ஆர்.டி.ஓ., அபிநயா, மாவட்ட நுாலக அலுவலர் விஜயகுமார், தாசில்தார் பார்த்தசாரதி உள்பட பலர் பங்கேற்றனர்.