/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2.11 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் நீரில் மூழ்கியது: உதய-நிதி
/
2.11 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் நீரில் மூழ்கியது: உதய-நிதி
2.11 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் நீரில் மூழ்கியது: உதய-நிதி
2.11 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் நீரில் மூழ்கியது: உதய-நிதி
ADDED : டிச 03, 2024 07:02 AM
திருவண்ணாமலை: ''தமிழகத்தில், 'பெஞ்சல்' புயலுக்கு தமிழகத்தில், 2.11 லட்சம் ஹெக்டேர் விவசாய
நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன,'' என, துணை முதல்வர் உதயநிதி கூறினார்.திருவண்ணாமலை மலையில் மண் சரிவில் சிக்கி, 7 பேர் பலியா-கினர். அந்த மீட்பு
பணியை ஆய்வு செய்யவும், பலியானவர்க-ளுக்கு இரங்கல் தெரிவிக்கவும் துணை
முதல்வர் உதயநிதி நேற்றி-ரவு வந்தார். உடன் அமைச்சர் வேலு, கலெக்டர் பாஸ்கர
பாண்-டியன் இருந்தனர்.பின்னர், துணை முதல்வர் உதயநிதி நிருபர்களிடம் கூறியதாவது: 'பெஞ்சல்' புயலால், 14 மாவட்டங்கள் பாதித்துள்ளன. இதனால், 1.50 கோடி பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர், 2.11 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில்
மூழ்கியுள்ளன. ஏராளமான சாலைகள், பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.மிகப்பெரிய பாதிப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு, தேசிய பேரிடர்
நிவாரணத்திலிருந்து, உடனடியாக முதல் கட்டமாக, 2,000 கோடி ரூபாய்
அவசர புனரமைப்பு மற்றும் மீட்பு நிதி வழங்கக்கோரி முதல்வர் ஸ்டாலின், மத்திய
அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு நிவா-ரணம்
மற்றும் மீட்பு பணிகளை ஆய்வு செய்து வருகின்றோம். முடிந்த அளவிற்கு, அரசு
சார்பாக நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றோம். கன மழையால், தமிழகத்தில் சோகத்தை அளிக்க கூடிய சம்பவம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை வ.உ.சி., நகர், 11வது தெருவில் ராஜ்குமார் என்பவரது வீட்டில்
மலையிலிருந்து ஒரு பெரிய பாறை உருண்டு விழுந்தது. இதில் வீட்டிலிருந்த
ராஜ்குமார் உள்-ளிட்ட, 7 பேர் பலியாகினர். தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மீட்பு
பணியில் ஈடுபட்டனர். உடன் தீயணைப்பு துறை-யினர், போலீசார் மீட்பு பணியில்
ஈடுபட்டனர். எப்படியாவது நல்ல செய்தி வரும், 7 பேரும் உயிருடன்
மீட்கப்படுவர் என எதிர்பார்த்திருந்தோம்.மாலையில், 7 பேரின் சடலம் மீட்கப்பட்டது வேதனையளிக்கி-றது. அவர்களது
மரணத்திற்கு அரசு சார்பாக இரங்கலையும், அவ-ரது உறவினர்களுக்கு
ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு
தலா, 5 லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதை நாளை
மாலைக்குள் வழங்க, கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.