/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'டெட்' தேர்வில் 2,171 பேர் 'ஆப்சென்ட்'
/
'டெட்' தேர்வில் 2,171 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : நவ 17, 2025 04:41 AM
சேலம்: ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பணி நியமனம், பதவி உயர்வு, சலுகை உள்ளிட்டவை கிடைக்கும். அதுவும் கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலாவதற்கு முன், பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் அனைவருக்கும், தகுதித்தேர்வு கட்-டாயம் என, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித்தேர்வை அறிவித்து, நேற்று முன்தினம், இடைநிலை ஆசிரியர்களுக்கு தாள் - 1 நடத்தப்பட்டது.
நேற்று, பட்டதாரி ஆசிரியர்களுக்கு தாள் - 2 தேர்வு நடந்தது. சேலம் மாவட்டத்தில், 48 மையங்களில், காலை, 8:30 முதல், 9:30 மணி வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டு, 10:00 முதல், 1:00 மணி வரை தேர்வு நடந்தது. அனுமதிக்கப்பட்ட, 18,847 பேரில், 16,676 பேர் எழுதினர். இது, 88.5 சதவீதம். 2,171 பேர் வரவில்லை. இது, 11.51 சதவீதம்.
குழப்பம்மாவட்ட நிர்வாக செய்தி குறிப்பில், 'டெட் தேர்வு எழுதியவர், 16,680 பேர் என, குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவே, மாவட்ட கல்-வித்துறை சார்பில், 16,676 பேர் எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்-ளது. இதனால், 4 எண்ணிக்கை முரண்பாடாக உள்ளது.

