/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறையில் 23 பொருட்கள் பறிமுதல்; துணை அலுவலருக்கு 'நோட்டீஸ்'
/
சிறையில் 23 பொருட்கள் பறிமுதல்; துணை அலுவலருக்கு 'நோட்டீஸ்'
சிறையில் 23 பொருட்கள் பறிமுதல்; துணை அலுவலருக்கு 'நோட்டீஸ்'
சிறையில் 23 பொருட்கள் பறிமுதல்; துணை அலுவலருக்கு 'நோட்டீஸ்'
ADDED : ஆக 21, 2024 06:29 AM
ஆத்துார்: சிறையில் மளிகை பொருட்கள் பறிமுதல் செய்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க, அதன் துணை அலுவலருக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில் மாவட்ட சிறை உள்ளது. அங்கு, 45 கைதிகள் உள்ளனர். அங்கு சேலம் மத்திய சிறை எஸ்.பி., வினோத், சிறைத்துறை விஜிலன்ஸ் போலீசார் கடந்த, 17ல் ஆய்வு செய்தனர். அப்போது தட்டச்சு அறையில் பதுக்கி வைத்திருந்த, 23 வகை மளிகை பொருட்களை பறிமுதல் செய்து சிறை உணவு பொருள் கிடங்கில் ஒப்படைத்தனர். தொடர்ந்து ஆத்துார் மாவட்ட துணை அலுவலர் வைஜெயந்தி, அங்கு பணிபு-ரியும் போலீசாரிடம் விசாரணை நடந்தது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, வைஜெயந்திக்கு, நேற்று, நேற்று எஸ்.பி., வினோத், 'நோட்டீஸ்' வழங்கினார்.
இதுகுறித்து வினோத் கூறுகையில், ''ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க, வைஜெயந்திக்கு, 'நோட்டீஸ்' வழங்கியுள்ளோம். விளக்கம் பெற்று துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆய்வு, மளிகை பொருட்கள் பறிமுதல் குறித்த அறிக்கை, தமிழக சிறைத்துறை டி.ஜி.பி., மகேஸ்வர்தயாளுக்கு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.