/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் மாவட்டத்தில் 233.9 மி.மீ., மழை ஆறு வீடுகள் சேதம்; மண் சரிவு அபாயம்
/
சேலம் மாவட்டத்தில் 233.9 மி.மீ., மழை ஆறு வீடுகள் சேதம்; மண் சரிவு அபாயம்
சேலம் மாவட்டத்தில் 233.9 மி.மீ., மழை ஆறு வீடுகள் சேதம்; மண் சரிவு அபாயம்
சேலம் மாவட்டத்தில் 233.9 மி.மீ., மழை ஆறு வீடுகள் சேதம்; மண் சரிவு அபாயம்
ADDED : மே 21, 2025 01:41 AM
சேலம் 'சேலம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கிய மழை, விடிய விடிய பரவலாக பெய்தது. அதற்கு முன், இரு நாட்களாக இரவில் கொட்டி தீர்த்த மழை, மூன்றாம் நாளாக நீடித்தது.
அதனால் வெப்பம் தணிந்து, அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இல்லாமல் போனது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 233.9 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக, டேனிஷ்பேட்டையில், 60 மி.மீ., தம்மம்பட்டி, 44, மேட்டூர், 35.2, ஏத்தாப்பூர், 26, சேலம், 21.9, ஏற்காடு, 20.2, நத்தக்கரை, 13, வாழப்பாடி, 6.4, ஓமலுார், 3.2, ஆணைமடுவு, 3, ஆத்துாரில், 1 மி.மீ., மழை பெய்துள்ளது.
கெங்கவல்லி, வேப்படி கிராமத்தில் விஜயலட்சுமி, ராமர் மனைவி லட்சுமி ஆகியோரின் கூரை வீட்டின் ஒரு பகுதி சேதமானது.
சேலம் அஸ்தம்பட்டி, ருக்மணியின் ஓட்டு வீடு, பெரியேரி கிராமத்தில் குணவதி என்பவரின் ஓட்டு வீடு, ஆத்துார் டவுனில் சின்னப்பிள்ளை என்பவரின் கூரை வீடு, மேட்டூர் அடுத்த வனவாசியில் சரோஜா என்பவரின் கூரை வீடு சேதமானது குறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேட்டூரில், நேற்று மதியம் அரை மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் மேட்டூர் மலைச்சாலையின் இருபுறமும் உள்ள பாறைகளில், ஈரப்பதம் அதிகரித்து தண்ணீர் கசிந்து வெளியேறுகிறது. மலைச்சாலை இரண்டாம் வளைவில் சில இடங்களில் சிறிய கற்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. ஒரு இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மழை தொடரும் பட்சத்தில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
* ஏற்காடு, காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை பகுதியில் தொடர் மழை காரணமாக, ஏற்காடு அடிவார பகுதியான உள்கோம்பையில் உருவாகும், மேற்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் டேனிஷ்பேட்டை ஏரிக்கும், கோட்டை குள்ளமுடையான் ஏரிக்கும் நீர் வரத்து துவங்கியுள்ளது.
* ஏற்காட்டில், விட்டு விட்டு மழை பெய்ததால் கடும் பனிமூட்டம் சூழ்ந்தது. சுற்றுலா பயணிகள் பனிமூட்டத்தை ரசித்தவாறு, மழையில் நனைந்தபடி மகிழ்ந்தனர். சிலர் மழையில் நனைந்தவாறு படகு சவாரி செய்தனர்.