/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம் 23 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு
/
பிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம் 23 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு
பிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம் 23 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு
பிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம் 23 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு
ADDED : பிப் 13, 2024 12:25 PM
சேலம்: சேலம் மாவட்டத்தில், நேற்று தொடங்கிய பிளஸ் 2 செய்முறை தேர்வுகளில், 23 ஆயிரத்து, 379 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் மார்ச், 1 முதல், 22 வரை பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது.
சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு, 35 ஆயிரத்து 758 மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வெழுதுகின்றனர். இதில் வேதியியல், உயிரியியல், கணினி அறிவியல், தொழில்நுட்ப பாடங்கள் உள்ளிட்டவற்றை தேர்வு செய்த, 23 ஆயிரத்து 379 மாணவ, மாணவியர் செய்முறை தேர்வில் பங்கேற்கின்றனர். இதற்காக சேலம் மாவட்டத்தில், 321 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் நேற்று முதல் செய்முறை தேர்வு தொடங்கியது.
இதில், அகத்தேர்வர், புறத்தேர்வர் உள்ளிட்ட பணிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிப்., 17க்குள் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வை நிறைவு செய்யவும், பிப்., 19 முதல், 24 வரை பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு செய்முறை தேர்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.