/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓமலுாரில் 24 மனை தெலுங்கு செட்டியார் ஆலோசனை கூட்டம்
/
ஓமலுாரில் 24 மனை தெலுங்கு செட்டியார் ஆலோசனை கூட்டம்
ஓமலுாரில் 24 மனை தெலுங்கு செட்டியார் ஆலோசனை கூட்டம்
ஓமலுாரில் 24 மனை தெலுங்கு செட்டியார் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 09, 2024 06:21 AM
ஓமலுார் : ஓமலுாரில், 24 மனை தெலுங்கு செட்டியார் பேரவையின், மாநில மாநாடு நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
சேலம் மாவட்ட, 24 மனை தெலுங்கு செட்டியார் பேரவை ஆலோசனை கூட்டம், ஓமலுாரில் நடந்தது. சேலம் மாவட்ட இளைஞரணி தலைவர் மணி தலைமை வகித்தார். 24 மனை தெலுங்கு செட்டியார் பேரவை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா கலந்து கொண்டார்.அதில், சேலத்தில் வரும் ஆக., 16ல், பேரவையின் நுாற்றாண்டு மாநில மாநாடு நடத்துவது தொடர்பாக, பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது. நடப்பாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்குதல், திருமண வரம் பார்க்கும் நிகழ்ச்சி, மெகா வேலைவாய்ப்பு முகாம், பேரவை வளர்ச்சிக்காக பாடுபட்ட மூத்தோர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை மாநாட்டில் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரவை மாவட்ட தலைவர் கணேசன், செயலாளர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.