ADDED : நவ 04, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலத்தில் நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு சில இடங்களில் காற்று வீசிய நிலையில் மழை பெய்தது. மாலை, 6:00 மணிக்கு லேசாக பெய்த மழை அரைமணி நேரம் நீடித்தது.
பின் மாவட்ட பகுதிகளில் இரவில் பரவலாக விட்டு விட்டு பெய்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வீரகனுாரில் அதிகபட்சமாக, 24 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. நத்தக்கரை, 21, வாழப்பாடி, 20, ஏற்காடு, 19.6, ஓமலுார், 15, ஆணைமடுவு, 11, சேலம், கரியகோவில் தலா, 4, கெங்கவல்லி, ஏத்தாப்பூர் தலா, 2, ஆத்துாரில், 1 மி.மீ., மழை பெய்துள்ளது.