/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
240 கிலோ புகையிலை காருடன் பறிமுதல்
/
240 கிலோ புகையிலை காருடன் பறிமுதல்
ADDED : ஆக 12, 2024 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா ஜோடுகுளி அருகே நெடுஞ்சாலையோரம், மகேந்திரா எக்ஸ்.யு.வி., கார், நேற்று காலை சந்தேகத்துக்கு இடமாக நீண்ட நேரம் நின்றிருந்தது.
இதையறிந்து, ஓமலுார் தேசிய நெடுஞ்சாலை போலீசார் அங்கு வந்தனர். காரில் யாரும் இல்லை. சோதனை செய்தபோது சீட்டுகள் இடையே, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. பின் தீவட்டிப்பட்டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில், 1.69 லட்சம் ரூபாய் மதிப்பில், 240 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை, காருடன் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கார் எண் குறித்து விசாரித்தபோது போலி என தெரிந்தது. இதனால் அங்கு காரை ஓட்டிவந்தவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.