ADDED : செப் 23, 2024 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி: சங்ககிரி மலை அடிவாரம் செல்லும் சாலையில் உள்ள, பெயின்ட் கடைக்காரர் ஜெகநாதன் வீட்டில், கடந்த, 19 இரவு, 25 பவுன் நகைகள் திருடுபோனது. இதனால், 5 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில் சங்ககிரி, பழைய, புதிய இடைப்பாடி சாலைகள், குப்பனுார் செல்லும் பிரதான சாலைகள், சார் பதிவாளர் அலுவலகம், மலையடிவாரம் செல்லும் சாலைகள் என, 50க்கும் மேற்பட்ட, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை நேற்று முன்தினமும், நேற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.வீட்டில் திருடியவர்கள், 'ஹெல்மெட்' அணிந்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் ஜெகநாதன், சென்னை சென்ற தகவல் தெரிந்தவர்களே, திருடர்களுக்கு தகவல் கொடுத்திருக்-கலாம் என கருதி, போலீசார் விசாரிக்கின்றனர்.