நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.
காப்பீடு, நிதி நிறுவனம், வங்கி, உற்பத்தி தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனத்தினர், தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர். இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என, 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, வேலைவாய்ப்புக்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் மணி உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர்.