/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வார இறுதி நாட்களை முன்னிட்டு 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
வார இறுதி நாட்களை முன்னிட்டு 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : ஜூலை 18, 2025 01:25 AM
சேலம், வார இறுதி நாட்களை முன்னிட்டு, சேலம் கோட்டம் சார்பில் இன்று முதல், 21 வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சேலம், பெங்களூரு, சென்னை கிளாம்பாக்கம், ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூர் மற்றும் சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூரு, பெங்களூரு, மற்றும் ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மதுரை, நாமக்கல்லில் இருந்து சென்னை, திருச்சியில் இருந்து ஓசூர், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு, ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலுார், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரம், ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம், இணையத்திலும் மற்றும் ஆப் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. புதிதாக சேலம்-கோவை வழித்தடத்தில், இரு மார்கத்திலும் தலா நான்கு பஸ்கள் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
இத்தகவலை, சேலம் கோட்ட போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஜோசப்டயஸ் தெரிவித்துள்ளார்.