ADDED : ஆக 31, 2026 05:52 AM

சேலம்:சேலம்
சோனா தொழில்நுட்ப கல்லுாரியில், 25வது பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள்
சொக்கு, தியாகு முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார்
அனைவரையும் வரவேற்று பட்டமளிப்பு விழா அறிக்கையை சமர்ப்பித்தார்.
சிறப்பு
விருந்தினரான, சென்னை, ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை
வழிகாட்டி கிருஷ்ணா பாலகுருநாதன், 15 பட்டதாரிகளுக்கு முனைவர்
பட்டங்களையும், சிறந்த தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த, 31 மாணவ,
மாணவியர், இளநிலை பட்டதாரிகள், 1,070 பேர், முதுநிலை பட்டதாரிகள்,
310 பேருக்கு, பட்டங்களை வழங்கினார்.
தொடர்ந்து கிருஷ்ணா
பாலகுருநாதன் பேசுகையில், ''சிறந்த உட்கட்டமைப்பு, மாணவர்களை
சிறந்தவர்களாக தயார்படுத்தல், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் சோனா
கல்லுாரி சிறந்து விளங்குவதால்தான் பல விருதுகளை பெற்றுள்ளது,''
என்றார்.
சோனா கல்விக்குழும தலைவர் வள்ளியப்பா பேசுகையில்,
''சவால்கள் நிறைந்த இன்றைய சூழலில் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து
அதற்கேற்ப தங்களின் ஆற்றலை நாள்தோறும் வளர்த்துக்கொண்டு திறம்பட
செயலாற்ற வேண்டும்,'' என்றார்.
சோனா கல்வி குழும முதல்வர்கள், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர்.
