/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆன்லைனில் 27 பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி
/
ஆன்லைனில் 27 பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி
ADDED : நவ 11, 2024 07:07 AM
சேலம் : காடையாம்பட்டி அருகே வேப்பிலையை சேர்ந்த, தனியார் பள்ளி ஆசிரியர் பாலமுருகன், 42, உள்பட சிலர், நேற்று, மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து பாலமுருகன் கூறியதாவது: என் மொபைலுக்கு கடந்த செப்டம்பரில், மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மொபைல் எண்ணில் இருந்து ஒரு, 'லிங்க்' வந்தது. அவரிடம் கேட்டபோது, ஆன்லைன் வெப் சர்வீஸ் மூலம் குறிப்பிட்ட தொகை செலுத்தி, தினமும் லாபம் சம்பாதிக்கலாம் என்றார். அதை நம்பி, நான் உள்பட, 27 பேர் முதலீடு செய்தோம். முதலில் அந்த நிறுவனத்திடம் இருந்து பணம் கிடைத்தது. பின் வரவில்லை. இதனால், 4 லட்சம் ரூபாய்க்கு மேல் ஏமாற்றப்பட்டுள்ளோம். அந்த பணத்தை பெற்றுத்தர முயற்சி செய்யாத, மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் உள்பட, 4 பேரை கண்டிக்கும்படி, போலீசாரிடம் கேட்டுக்கொண்டேன். மேலும் மாவட்டத்தில், 600 பேரிடம், 1 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.