/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உயிர் துறந்த போலீசாருக்கு 28ம் ஆண்டு நினைவேந்தல்
/
உயிர் துறந்த போலீசாருக்கு 28ம் ஆண்டு நினைவேந்தல்
ADDED : அக் 22, 2025 01:10 AM
சேலம் ராணுவம், போலீசில் பணியின்போது உயிர் துறந்தவர்களுக்கு, அக்., 21ல், வீர வணக்க நாள் நினைவேந்தல் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி சேலம் மாநகர் போலீசில், 28ம் ஆண்டு வீர வணக்கநாள் நினைவேந்தல், நேற்று நடந்தது. இதனால் மாநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள போலீஸ் நினைவு துாண், மலர், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. அங்கு போலீஸ் கமிஷனர் அனில்குமார்கிரி, மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, கலெக்டர் பிருந்தாதேவி, எஸ்.பி., கவுதம்கோயல், மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள், மறைந்த போலீசாரின் குடும்பத்தினர் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டன. இசைக்குழு போலீசார், அஞ்சலி இசையை வாசிக்க, 60 துப்பாக்கி குண்டு முழங்க, அடுத்து, 2 நிமிட அஞ்சலி செலுத்தி, நினைவேந்தல் நிகழ்வு நிறைவு பெற்றது. இதையடுத்து, இறந்த போலீசாரின் குடும்பத்துக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்
பட்டனர்.